Tuesday, August 2, 2011

ஆடல் காணீரோ...


ஆடல் காணீரோ...

Singer:- M.L.Vasanthakumari

Raagam :- Charukesi

ஆடல் காணீரோ
ஆடல் காணீரோ
விளையாடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ...ஓ ஓ..
ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜபௌத்திர...
ஆஅ...ஆஅ....ஆஆ...ஆஆ....ஆஅ..
பாடல் மதுரையில் ராஜபௌத்திர
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..ஓஓ..

கூட்டு பெருத்தாலே
உன்னை கூட்டும் வைகை என்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே...ஏ...
கூட்டு பெருத்தாலே
உன்னை கூட்டும் வைகை என்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொராள் தந்து
வேந்தனின் ஆணை தனை
வீட்டுக்கொராள் தந்து
வேந்தனின் ஆணை தனை
ஏற்று வினை முடிக்கவே...
பேற்றடயாத ஒரு
வண்டியின் கோலி ஆளாய்..
பிள்ளை பெற்றடயாத ஒரு
வன்தியின் கூலி ஆளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே..
வந்து சித்தனை போல
கை பிரம்பாலே பட்ட அடி !
சித்தனை போல
கை பிரம்பாலஎ பட்ட அடி
பேசிடும் சகல ஜீவ ராசிகள்
முடுகிலும் பட்டு வலுவுற்ற ஈசன் -
விளையாடல் காணீரோ..ஓ;ஓ..


நரிதனை பரியாக்கி
பரிதனை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து...
நரிதனை பரியாக்கி
பரிதனை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து
உயர் நாண்குவேதே பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
நாண்குவேதே பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
நக்கீரர் புகழ் நேசித்து...
வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி
வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து...
வாய்-திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி
வலை வீசி மீன் பிடித்து...
வாய்-திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரத்ன வளை விட்ற -
விளையாடல் காணீரோ..
பாடல் மதுரையில் ராஜபௌத்திர
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..ஓ..ஓ..


No comments:

Search This Blog

Twitter