குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - அங்கே
குவிந்தாதம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம்..
கொண்டாட்டம்..
(குன்றத்திலே)..
தெய்வானை திருமணமாம் திருபறன்குன்றம்..
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்...
தங்கம், வைரம், பவழம், முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை..
முருக பெருமானை.. பெருமானை..
(குன்றத்திலே)
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை ..
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை...
வேல் முருகா.. வெற்றி வேல் முருகா..
வேல் முருகா.. வெற்றி வேல் முருகா..
சந்தனம் பூசுங்கள் ,குங்குமம் சூடுங்கள்,
ஹர ஹர பாடுங்கள் ,வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்....
முருகனுக்கு வேல் வேல்...
வேல் முருகா வெற்றி வேல் முருக..(அரோஹரா)...
வேல் முருகா வெற்றி வேல் முருக..(அரோஹரா)...
வேல் முருகா வெற்றி வேல் முருக..(அரோஹரா)...
Movie:-Deivam
Singer:- Bangalore Ramani Ammal
Music:- Kunnakudi L Vaidyanathan